Friday, December 24, 2010

படித்ததில் பிடித்தது - 2

எழுதலாம் என்று முடிவு செய்தவுடன் முதலில் தோன்றிய கேள்வி இது, எனவே முதல் வலை ஏற்றமாக.
படித்து, பிடித்தது, பிறர் பரிந்துரைத்தது என பல விஷயங்கள் எழுதுவதற்க்கு இருப்பினும் இதை முதலில் தெளிவு படுத்திவிடுவது நன்று.
எல்லோரும் வலைப்பதிவு இடுகிறார்கள் என்பதற்காக நானும் இடபோவடுஇல்லை.
எழுத்து (() வாசிப்பு) என்பது பலருக்கும் ஒரு பொழுதுபோக்காகவே இருக்கும்.
என்போல எல்லா சாதாரணனும் கவிதைகளை மிக சுலபமாக(?)எழுதிவிடுகிறார்கள். அதை பதிவிலும் இட்டு விடுகிறர்கள். ( பஸ் பயணத்தின்போது மட்டும் புத்தகம் வாசிப்பவர்களும் உண்டு !)
சிலருக்கு அது ஒரு நல்ல பழக்கமாக இருக்கும். ("Reading is a good habit you know?")
சிலருக்கு அது ஒரு பிடிக்காத
பழக்கமாக இருக்கும். ("புத்தகம் எல்லாம் எப்படிடா படிக்கறீங்க? சுத்த வேஸ்ட் !")
சிலருக்கு மட்டும் தான் அது ஒரு அனுபவமாக வாய்க்கிறது. (பாலகுமாரனை படித்து இருக்குறீர்களா?)
என்னைப் பொறுத்தவரையில் எழுத்து என்பது ஒரு நல்ல வடிகால். சிந்தனை தறி கேட்டு அலையும்போதும், மனம் நிம்மதி இன்றி இருக்கும்போதும், ஏதாவது எழுதுவது என்று ஒரு எண்ணம் வரும். அதனால் ஒரு நிம்மதியும்
வாய்க்கும் என்று ஒரு எண்ணம் வரும்.
தனியே காகிதத்தில் எழுதி பின் கிழித்து எறிந்ததும் உண்டு.

இதோ இந்த பதிவை எழுதுவதற்கும் நிறைய நாட்கள் யோசித்து பிறகு இணையத்தில் எழுத தெரிந்து கொண்டு முதல் முயற்சியை செய்கிறேன்.

படித்ததில் பிடித்தது என்று முதல்பதிவில் சொல்லி இருப்பதை ஒட்டி இதோ என்க்கு மிகவும் நினைவில் இருக்கும் ஒரு கவிதை. எப்போதோ சிறு வயதுகளில் படித்து, இப்போதும் நினைவில் இருப்பது. கண்டிப்பாக இந்த கவிதையை நான் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே படித்து இருக்கிறேன். நான் மிகவும் ரசித்தது.
"புத்தனுக்கு கூட ஓர் ஆசை,
ஆசையில்லாமல்
இருக்க வேண்டுமென்று "


இதை எழுதியவர் யார் என்று தெரிய வில்லை. இப்போதும் என் மனதில் இருப்பதால்தான் இதனை முதலில் வலை ஏற்றுகிறேன்.
பிடித்து இருப்பின் பின்னூட்டம் இடுங்கள்.

வி.இராஜசேகர்.


Thursday, December 23, 2010

படித்ததில் பிடித்தது

வணக்கம்
என்னுடைய புதிய வலைப்பக்கத்துக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.
நான் படித்த, எனக்கு பிடித்த புத்தகங்களை மற்றும் பதிவுகளை இங்கே
பதிகிறேன். பகிர்கிறேன் .